நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு வரும் 14-ந்தேதியுடன் முடிவடையும் என எதிர்பார்க்கும் நிலையில் நொய்டாவில் ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளன. தற்போது வரை 3374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வரைஸ் தொற்றின் பரவலை முறியடிக்கும் வகையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் வருகிற 14-ந்தேதிக்குள் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது சந்தேகம்தான் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.ஷ

இதற்கிடையே மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நொய்டாவில் உள்ள கவுதம் புத் நகரில் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஊரடங்கு உத்தரவு தளர்க்கப்பட்டாலும் ஏப்ரல் 31-ந்தேதி வரை நொய்டாவில் நீட்டிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகள், மதம், சமூகம், விளையாட்டுகள், கலாசாரம் தொடர்பான கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 8 =