கொரோனாவால் இறப்பவர்களின் தினசரி எண்ணிக்கை திடீரென அதிகரித்தத்தைத் தொடர்ந்து பிரான்சின் இறப்பு வீதம் சீனாவையே மிஞ்சியது. நேற்று மட்டுமே பிரான்சில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 499 ஆனதையடுத்து, இறப்பு வீதத்தில் சீனாவை மிஞ்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது பிரான்ஸ். இதனால் பிரான்சில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,523 ஆகியுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே, வீடுகளிலோ முதியோர் இல்லங்களிலோ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதில் அடங்கவில்லை என்பதால் உண்மையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம். கொரோனா உருவான சீனாவிலேயே 3,309 பேர்தான் கொரோனா தொற்றுக்கு பலியானதாக கூறப்படுகிறது. மாகாண சுகாதார ஏஜன்சியின் இயக்குநரான Jérôme Salomon கூறும்போது, பிரான்சில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 17% உயர்ந்து 52,128 ஆகியுள்ளது என்றார்.

ஆனால், பிரான்ஸ் தற்போது கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளதால் இந்த திடீர் உயர்வு உருவாகியிருக்கலாம் என்கிறார் அவர். திங்கட்கிழமையை ஒப்பிடும்போது, மிகவும் அபாய கட்டத்திலிருப்போரின் எண்ணிக்கை 9% உயர்ந்து 5,565 ஆகிவிட்டது என்றார் அவர். ஆனால், முந்தைய நாட்களை ஒப்பிடும்போது, இந்த உயர்வு சற்று குறைவுதான் என்றும் கூறுகிறார் அவர்.,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + two =