இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்த நிலையில், இளவரசர் சார்லசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கொரோனா வைரசில் இருந்து குணமடைந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தலில் இருந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =