ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசி வருகிறார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த் தொற்று தற்போது இந்தியாவிலும் தீவிரமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4.45 மணியளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் எடுக்கப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 13 =