திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் குழு மூலம் 48 ஆயிரம் முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் தற்போது, 54 ஆயிரம் முக கவசங்கள் இருப்பில் உள்ளன.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் பெஞ்சமின் நிருபர்களிடம கூறியதாவது:-

மகளிர் குழு மூலம் 48 ஆயிரம் முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் தற்போது, 54 ஆயிரம் முக கவசங்கள் இருப்பில் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்காக 690 படுக்கைகள், 46 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் தற்போது 1,955 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − eight =