காசநோய் தடுப்பு மருந்தை கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க  பயன்படுத்தும் 4 நாடுகள்!

0
152

பிரித்தானியாவில் 1953க்கும் 2005க்கும் இடையில், 10 முதல் 14 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் BCG எனப்படும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. BCG காச நோய் வராமல் தடுப்பதற்காக போடப்படும் தடுப்பூசியாகும். நாட்டில் காச நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்த பின்னர், 2005இல் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுவது நிறுத்தப்பட்டு, அபாயத்திலிருப்போருக்கு மட்டும் தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வேகமாக பரவி, விலை மதிப்பில்லா மனித உயிர்களை பலி வாங்கும் கொரோனாவை எப்படியாவது தடுத்து நிறுத்துவதற்காக, ஏதாவது ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துவிடமுடியாதா என பல்வேறு நாட்டு அறிவியலாளர்களும் தங்களாலான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அறிவியலாளர்களின் கவனம் காச நோய் தடுப்பூசி பக்கம் திரும்பியுள்ளது.

அதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது. அது என்னவென்றால், தடுப்பூசியில், பொதுவாக ஒரு நோய்க்கிருமியின் ஒரு சிறு பாகத்தை ஒரு மனிதனின் உடலில் செலுத்துவார்கள், மனித உடல் அந்த கிருமியின் உடல் பாகத்துக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கும். அந்த குறிப்பிட்ட வைரஸ் உண்மையாகவே அவரது உடலுக்குள் நுழையும்போது, அந்த கிருமியை எதிர்ப்பதற்காக, அவரது உடலில் ஏற்கனவே தயாராக இருக்கும் ஆன்டிபாடிகள் அந்த கிருமியை எதிர்த்து போரிடும்.

இதுதான் தடுப்பூசி செயல்படும் விதம்! ஆனால், BCG தடுப்பூசியைப் பொருத்தவரை, அது காச நோய்க்கு எதிராக பயன்படுத்தப்பட்டாலும், அந்த தடுப்பூசியில் ஒரு உயிரற்ற நோய்க்கிருமியின் ஒரு சிறு உடல் பாகம் மனித உடலுக்குள் செலுத்தப்படாமல், உயிருள்ள, வீரியம் குறைந்த ஒரு நோய்க்கிருமியே உடலுக்குள் செலுத்தப்படும். அத்துடன், BCG தடுப்பூசி போடும்போது, அது காசநோய்க்கு எதிராக மட்டும் போராடாமல், உடலின் மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் தூண்டி, எத்தகைய நோய்க்கிருமி உடலுக்குள் நுழைந்தாலும் அவற்றை எதிர்த்து போரிடும்.

ஆகவே, இந்த உண்மையை தற்போதைய சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தி, BCG தடுப்பூசி கொரோனாவை எதிர்க்கிறதா என்பதை அறிவதற்காக பிரித்தானியா மட்டுமின்றி, நெதர்லாந்து, கிரீஸ், அவுஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் சோதனை முயற்சியில் இறங்க இருக்கின்றன. நெதர்லாந்தில் 1,000 சுகாதாரத்துறை பணியாளர்கள் மீது இந்த தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட உள்ளது. அப்படி, இந்த சோதனை முயற்சிகள் வெற்றிபெற்றால், வெறும் 30 பவுண்டுகள் செலவில், சில மாதங்களுக்குள் இந்த தடுப்பூசி கொரோனாவுக்கெதிராக பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 15 =