இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் ரத்து? நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!

0
61
Parliament

இந்திய மக்கள் தொகை 2050ஆம் ஆண்டுக்குள் சீனாவை விட அதிகமாகும் என்றும் எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்திற்கு இரு குழந்தைகள் என்ற முறைக்கான தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
சிவசேனா எம்.பி அனில் தேசாய் மாநிலங்களவையில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் என்ற முறையை அமல்படுத்த வேண்டும்; இரண்டுக்கும் மேல் குழந் தைகள் உள்ள குடும்பங் களுக்கு அரசு சலுகைகளை ரத்து செய்வதோடு, அவர் களுக்கான வரிகளை உயர்த்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு பல சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் அந்த மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 12 =