குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். CAA வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர்.கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றின. அந்த வகையில், தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையிலும் CAAக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் கிரண்பேடியின் எதிர்ப்பையும் மீறி, இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த நியமன உறுப்பினர்கள், புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய் துள்ளனர், அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்தனர். காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் புதுச்சேரி சட்டப்பேரவையில் சிகிகிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.
இதனை அடுத்து செய்தி யாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பதால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகவும், அதனால் எங்கள் அரசை டிஸ்மிஸ் செய்தாலும் பரவா யில்லை என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − two =